544. மீண்டும் ஒரு ஏழைப்பெண்ணின் கல்விக்கு உதவி வேண்டி
அன்பான வலைப்பதிவுலக நண்பர்களே,
இப்பதிவை சற்று சிரமம் எடுத்து முழுவதும் வாசிக்கும்படி, வாசகர்களாகிய உங்களுக்கு, முதலில் ஒரு வேண்டுகோள் !!!
2005-இல் பிரமிக்க வைக்கும் கௌசல்யா என்ற என் இடுகையைத் தொடர்ந்து, பல நண்பர்கள் பொருளுதவி செய்தனர். அதன் வாயிலாக கௌசல்யாவின் முதலாண்டு மருத்துவப்படிப்புக்கு உதவ முடிந்தது. தகவல்கள் சென்னைப் பெருமழையும் நெகிழ்ச்சியானதொரு சந்திப்பும் என்ற எனது இடுகையில் காணலாம்.
கௌசல்யாவின் மருத்துவப் படிப்பு முடியும் வரை, அவருக்கு (இயன்ற அளவில்) உதவலாம் என்ற எண்ணத்தில், சில தமிழ் வலையுலக நண்பர்களையும் கலந்தாலோசித்து, தொடர்ந்து அவரது கல்விக்கான உதவி செய்ய, கௌசல்யாவின் கல்விக்கு உதவி வேண்டி ஒரு வேண்டுகோள் இடுகை இட்டேன். இன்னும் பலப்பல நல்ல உள்ளங்கள் செய்த பொருளுதவி, கௌசல்யா படிப்பை முடிக்கும் வரையில் போதும் என்ற வகையில் அமைந்தது ! தற்போது கௌசல்யா ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வருகிறார். மிகுந்த தன்னம்பிக்கை மிக்க ஒரு பெண்ணாகவும் விளங்குகிறார். இதற்கு, நம் தமிழ் வலைப்பதிவுலகமும் ஒரு காரணம் என்று எண்ணும்போது பெருமையாக இருக்கிறது !
கௌசல்யா குறித்த எனது பதிவுகளை இங்கே காணலாம்
நண்பர்களுடன் சமூகசேவை -சமயம் கிடைக்கும்போது இவ்விணைபபில் உள்ள இடுகைகளை வாசிக்கவும்.
கௌசல்யாவின் சொந்த ஊரான அந்தியூரைச் சேர்ந்த இன்னொரு ஏழை மாணவிவின் பொறியியல் படிப்புக்கு உதவ இயலுமா என்று கௌசல்யா என்னிடம் கேட்டதின் தொடர்ச்சியாக, அப்பெண்ணின் மதிப்பெண் மற்றும் பிற சான்றிதழ்களை அவரிடம் கேட்டுப் பெற்றேன். பானுப்பிரியா என்ற அம்மாணவியின் தந்தை மண்பானை செய்யும் ஒரு தொழிலாளி. அப்பெண் மிக நல்ல மதிப்பெண்கள் பெற்றிருப்பதால், நடக்கவிருக்கும் கவுன்சலிங்கில் பொறியியல் படிப்பில் சீட் கிடைக்க பிரகாசமான வாய்ப்பு இருப்பதாகவே நினைக்கிறேன். ஆனால், குடும்பச் சூழல் காரணாமாக, பெண்ணின் தந்தை அவளை மேலே படிக்க வைக்க யோசிப்பதாக கௌசல்யா மூலம் அறியப் பெற்றேன்.
பானுப்பிரியாவின் கல்விச் செலவுக்கு, பண உதவிக்கான இந்த வேண்டுகோளை, உங்கள் முன் மீண்டும் வைக்கிறேன். உங்களால் இயன்ற தொகையை (அது சிறியதாக இருந்தாலும்) உதவியாக அளிக்குமாறு உங்களிடம் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். உதவிக் தொகையை (அம்மாணவிக்கு சரியான வகையில் பயனளிக்கும் விதமாக) சேர்ப்பிப்பதற்கு நானும், நண்பர் ரஜினி ராம்கியும் பொறுப்பெடுத்துக் கொள்கிறோம்.
அனைத்து நண்பர்களுக்கும்:
****************************************
பண உதவி செய்ய விரும்பும், இந்தியாவிலிருக்கும் நண்பர்கள் / வெளிநாட்டிலிருந்து (ரூபாய்) காசோலையாக (அ) என் வங்கிக் கணக்குக்கு Direct credit செய்து உதவ விரும்பும் அன்பர்கள், தயவு செய்து கீழ்க்கண்ட மின்னஞ்சல்களுக்கு எழுதவும்.
balaji_ammu@yahoo.com
rajni_ramki@yahoo.com
இங்கே பின்னூட்டத்தில் உங்கள் மின்மடல் முகவரியை இட்டாலே போதும். நான் / ராம்கி உங்களுக்கு பணம் அனுப்புவதற்கான விவரங்களை (வங்கி சம்மந்தப்பட்ட மற்றும் எங்கள் முகவரி) தெளிவாக உங்களுக்கு தெரிவிக்கிறோம்.
**********************************
கல்வி மற்றும் மருத்துவ உதவிக்காக முன்னர் பணம் அனுப்பிய நண்பர்களிடம், எனது மற்றும் ராம்கியின் வங்கிக் கணக்கு தகவல்கள், நான் அப்போது அனுப்பிய மடல்களில் இருக்கும். பானுப்பிரியாவின் சான்றிதழ்கள் உங்கள் பார்வைக்கு, கீழே:
பானுப்பிரியாவின் XII மதிப்பெண்களை இத்தளத்தில் சரி பார்த்துக் கொள்ளலாம் . இது தகவலுக்காக மட்டும். தவறாக எண்ண வேண்டாம் ! அவரது பதிவு எண் 315000
28 மறுமொழிகள்:
Test comment !
பாலா!
இது போன்ற உங்கள் முயற்சிகள் மென்மேலும் தொடர்ந்து பெரும் வெற்றியடைய வாழ்த்துகள் பல.
பாலா,
உங்கள் பேங்க் டீடெய்ல்ஸ் தேவை...எனது ஈமெய்லுக்கு அனுப்புங்கள். எனது ஈமெயில் முகவரி: deltanathan@gmail.com
I've sent you a separate email
பாலா,
உங்கள் பேங்க் டீடெய்ல்ஸ் தேவை...எனது ஈமெய்லுக்கு அனுப்புங்கள். எனது ஈமெயில் முகவரி: deltanathan@gmail.com
இந்த முயற்சியும் வெற்றியடையும் சந்தேகமில்லை...
என் பெயருக்கு ரூபாய் 500 போட்டு கொள்ளுங்கள். நான் வழக்கம் போல உங்களை நேரடியாகவே பார்த்து ரொக்கமாகவே கொடுத்து விடுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வளர்க ...
Friends who have sent emails, pledging help:
I will respond by evening. Many Thanks for your support.
பாலா
வாழ்த்துக்கள்
என் பங்களிப்பு நிச்சயம் உண்டு
Hi
உங்கள் பணி மேலும் தொடர எங்களுடைய வாழ்த்துக்கள். உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்.
ankannabiran@yahoo.com (to send bank detail)
உங்களது பங்களிப்பு பிரமிக்க வைக்கிறது. என்னால் இயன்ற உதவியை நிச்சயம் செய்கிறேன். எனது நண்பர்களுக்கும் தெரியப்படுத்துகிறேன். தொடரட்டும் உமது சேவை.
ஸ்ரீ....
வங்கி விபரங்களை அனுப்பவும்,முடிந்த அளவில் உதவி செய்கிறேன்.
vaduvurkumar@gmail.com
உங்கள் பணி வெற்றியடைய வாழ்த்துகள்.
ஸ்ரீதர் நாராயண், அதுசரி, செ.ரவி, டோண்டு சார், தருமி சார், சங்கர், செய்திவளையம், மனசு, ஸ்ரீ, வடுவூர் குமார் மற்றும் மடல்வழி தொடர்பு கொண்ட நல்லுள்ளம் கொண்ட நண்பர்கள் அனைவருக்கும்
மிக்க நன்றி.
இதில் என் பங்கு பெரிதாக எதுவும் கிடையாது. உங்களின் ஊக்கமும் ஆதரவும் தான் என் உதவி முயற்சிகள் அனைத்துக்கும் ஆதாரமானவை
தொடர்பு கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் என் மற்றும் ராம்கியின் வங்கிக் கணக்கு விவரங்களை மடல்வழி அனுப்பி விட்டேன்.
Please send your account details to
nandakumar.raman@gmail.com
பாலா மற்றும் ராம்கி
தங்களின் இந்த முயற்சியும் கண்டிப்பாக வெற்றி அடையும்.... வாழ்த்துக்கள்....
என் வாழ்த்து எப்போதும் உங்களுக்கு உண்டு... உதவியும் விரைவில் உங்களை வந்தடையும்........
Pl. email me the bank details.
Nanda, R Gopi, Clayhorse,
ஆதரவுக் கரம் நீட்டியதற்கு மிக்க நன்றி.
Clayhorse,
I need your email ID to send you the bank details for money transfer !
அன்புடன்
பாலா
my email id: kbaski at gmail dot com
pl.let me know the address to which cheque should be sent
matravar@gmail.com
G Baski, G,
I have sent mail providing necessary details for transfer.
Thanks
anbudan
BALA
This could be another option for students who need such help
http://www.vidial.org/Need_Schloarship.html
can you also send me your bank account details ?
விபரங்கள் இன்னும் வரவில்லையே!!
வடுவூர் குமார்,
உங்களுக்கு 14 ஜூலை அன்றே உங்கள் ஜிமெயிலுக்கு வங்கி விவரங்கள் அனுப்பியிருக்கிறேன்.
vaduvurkumar@gmail.com சரி தானே ?
அதே மின்மடலை இன்று மீண்டும் ஃபார்வர்ட் செய்துள்ளேன்.
பணம் கிடைத்ததா?
வடுவூர் குமார்,
எந்த வங்கிக் கணக்குக்கு எந்த தேதியில் அனுப்பினீர்கள் ? என்னுடையதா அல்லது ராம்கியினுடையதா ?
இன்று வரை வரவில்லை. தனிமடல் அனுப்பவும். நன்றி.
எ.அ.பாலா
Post a Comment